செமஸ்டர் தேர்வு வந்தாச்சு! சென்னை பல்கலை இறுதியாண்டு மாணவர்களுக்கான தேதி அறிவிப்பு!!

6 September 2020, 11:33 am
Madras Univ- Updatenews360
Quick Share

சென்னை பல்கலைக்கழகம் மற்றும் இணைப்பு கல்லூரிகளில் இறுதியாண்டு செமஸ்டர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பொது முடக்கம் காரணமாக பள்ளி கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுகள் தவிர அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைந்த இணைப்பு கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு வரும் 21 ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடக்கும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும் தேர்வு முடிவுகள் வரும் அக்டோபர் 14ஆம் தேதி வெளியிடப்படும் என்று சென்னை பல்கலைக்கழகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0