கத்திமுனையில் 80 வயது மூதாட்டி பலாத்காரம்… காமூகனை கைது செய்த போலீசார்…!!!

8 April 2021, 8:20 pm
Madurai 80 year old rape - updatenews360
Quick Share

மதுரை : மதுரை அருகே கத்தி முனையில் 80 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

சோழவந்தான் அருகே உள்ள வடகாடுபட்டியில் வசித்து வருபவர் சவுந்திர பாண்டி. 40 வயதான இருவருக்கு, திருமணமாகி மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், வீட்டின் அருகே தனியாக வசித்து வந்த 80 வயது மூதாட்டியின் வீட்டிற்குள் சவுந்திர பாண்டி சென்றுள்ளார். அங்கு, கத்தி முனையில் மிரட்டி அந்த மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், கொலை மிரட்டலும் விடுத்தாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, பாலியல் தொல்லைக்கு ஆளான மூதாட்டியின் உடல்நிலை மோசமடைந்ததால், அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், மூதாட்டி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பாலியல் தொல்லை கொடுத்த காமூகன் சவுந்திர பாண்டியை கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 0

0

0

Leave a Reply