மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார்

Author: kavin kumar
13 August 2021, 10:50 pm
Quick Share

மூச்சுத்திணறல் காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மதுரை ஆதினம் அருணகிரிநாதர் உடல்நலக் குறைவால் காலமானார்.

தமிழகத்தின் பழமையான சைவ மடங்களில் ஒன்று மதுரை ஆதீனம். மதுரை ஆதீனத்தின் 292வது குருமகா சந்நிதானமாக இருந்துவந்தார் அருணகிரிநாதர். இந்த மடத்தின்கீழ் தஞ்சை மாவட்டம் கஞ்சனூர் அக்னீஸ்வர சுவாமி கோவில், திருப்புறம்பியம் காசிநாத சுவாமி கோயில், கச்சனம் கைசின்னேஸ்வர சுவாமி கோயில் உள்ளிட்ட பல கோயில்கள் உள்ளன. இந்த ஆதீனத்துக்குச் சொந்தமாக பல ஆயிரம் ஏக்கர் நிலங்களும் உள்ளன.இந்த ஆதீனத்தின் 292-வது குருமகா சந்நிதானமான அருணகிரிநாதருக்கு வயது முதிர்வு காரணமாக கடந்த 9ம் தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து உடனடியாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில், அவர் காலமானார். சைவ ஆதீனங்களில் மிகப் பழமையான ஆதீனமாகிய மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத பரமாச்சாரிய குருமகா சந்நிதானம், சிறந்த தமிழ் புலமையும் பன்மொழி புலமையும், கனீர் என்ற குரல் வளமும் பேச்சாற்றலும் மிக்கவர்கள். மதுரை ஆதீனகர்த்தர் மறைவு தமிழ் இனத்திற்கும் சைவப் பெருமக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு என பிற ஆதின மடாதிபதிகள் தெரிவிக்கின்றனர்.

Views: - 336

0

1