மதுரை ஆதீனம் உடல்நலக்குறைவால் அப்பலோ மருத்துவமனையில் அனுமதி : கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 August 2021, 2:00 pm
Madurai Aadheenam - Updatenews360
Quick Share

மதுரை : மதுரை ஆதீனம் அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி உடல்நலக்குறைவு காரணமாக கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள மிக பழமையான சைவ சமய திருமணங்களில் ஒன்றான மதுரை ஆதீனத்திற்கு தலைமை வகிப்பவர் ஆதீனம் என்று அழைக்கப்படுகிறார். இதில்அருணகிரி ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி என்பவர் 292வது ஆதீனமாக உள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மதுரை ஆதீனம் உடல் நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மதுரை ஆதீனம் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால்,மேற்கொண்டு எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை. இதுபோன்று இதற்கு முன்பும், பலமுறை உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அருணகிரி சுவாமி அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 291

0

0