‘விநாயகர் சதுர்த்தி விழாவை அரசு நடத்த வேண்டும்’: தமிழக அரசுக்கு மதுரை ஆதீனம் வேண்டுகோள்!!

Author: Aarthi Sivakumar
6 September 2021, 1:42 pm
Quick Share

மதுரை: விநாயகர் சதுர்த்தி விழாவை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்தார்.

பரமக்குடியில் அனைத்து வெள்ளாளர் மகாசபை சார்பில் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாள் விழா ஐம்பெரும் விழாவாகக் கொண்டாடப்பட்டது. இதற்கு அனைத்து வெள்ளாளர் மகா சபைத் தலைவர் குரு சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

இந்த விழாவில், துணைத் தலைவர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார். சிதம்பரனாரின் சிறப்புகள் குறித்து அனைத்து வெள்ளாளர் மகாசபையின் நிறுவனரும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தனி அலுவலருமான கார்த்திகேயன் பேசினார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரி சுவாமிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட  தடை : வீடுகளில் விநாயகர் சிலை வைத்து வழிபடும் தனி நபர்கள் ...

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தடை விதிப்பது சரியல்ல. விநாயகர் சதுர்த்தி விழாவை அரசு ஏற்று நடத்த வேண்டும். இளைய தலைமுறையினரைப் பாதுகாக்க வேண்டும் என்றால் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். மத்திய அரசு நாட்டைப் பாதுகாத்து வருகிறது. மோடியின் செயலால் எல்லைப் பகுதி பாதுகாக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.

நித்யானந்தாவால் எங்கள் குரு மகா சன்னி தானத்தை ஒன்றும் செய்ய முடியாது. அவருக்கும், எங்கள் குரு மகா சமுதாயத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அறிவிப்பு சரியானது அல்ல என அவர் கூறினார்.

Views: - 341

0

0