அமைச்சர் செல்லூர் ராஜு ஆதரவாளர்கள் கொண்டாட்டம் : பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி உற்சாகம்!!

Author: Udayachandran
7 October 2020, 12:35 pm
Maduria ADMK - updatenews360
Quick Share

மதுரை : அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதை அடுத்து மதுரையில் அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

2021 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று அறிவிக்கப்பட்டார்.

இதனையடுத்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கோலாகல கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக மதுரையில் கோகலே சாலையில் உள்ள அதிமுகவின் மதுரை மாநகர் மாவட்ட அலுவலகம் முன்பு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூவின் ஆதரவாளர்கள் ஒன்று கூடி பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு வாழ்த்துகள் தெரிவித்து ஆதரவாளர்கள் கோஷமிட்டனர்.

Views: - 43

0

0