துபாயில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு தங்கம் கடத்தல் : இரு பயணிகளிடம் 1,200 கிராம் தங்கம் பறிமுதல்

Author: Babu Lakshmanan
8 October 2021, 10:08 am
madurai airport - updatenews360
Quick Share

மதுரை : துபாயிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த இரு பயணிகளிடம் 1,201 கிராம் எடையுள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை விமான நிலையத்தில் சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு துபாயில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக வந்த தகவலையடுத்து சுங்கத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் சந்தேகத்திற்குரிய நபர்களிடம் விசாரணை செய்து வந்தனர். அதில், இராமநாதபுரம் மாவட்டம் புதுமாயக்குளத்தை சேர்ந்த நடராஜன் மகன் அஜித்குமார் (23) என்பவரிடமிருந்து ரூ.40.50 லட்சம் மதிப்பிலான 981.68 கிராம் தங்கம் பிடிபட்டது.

இதேபோல், ராமநாதபுரம் மாவட்டம் நாச்சிகுளம் பகுதியை சேர்ந்த சேர்வைகாரன் ஊரணி மேல தெரு களஞ்சியம் என்பவரது மகன் பாலமுருக குமார் (27) என்பவரிடமிருந்து 220 கிராம் எடையில் ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கைப்பற்றினர். இதனையடுத்து சுங்கத்துறையினர் இருவரிடம் தங்கம் கடத்திவரப்பட்டது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 296

0

0