அனுமதியின்றி அந்த முத்திரை.. ‘இந்தியன் 2’படத்தை வெளியிட தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு..!

இந்தியன் 2 படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில் படக்குழு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை ஜுலை 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நடிகர் கமலஹாசன் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் இந்தியன் 2 திரைப்படம் ஜிலை 12 ஆம் தேதி வெளியாக உள்ளது, இந்நிலையில் மதுரை ஹெச்.எம்.எஸ் காலனியில் உள்ள வர்மக்கலை, தற்காப்புக்கலை மற்றும் ஆராய்ச்சி அகாடமியின் தலைமை ஆசான் ராஜேந்திரன் என்பவர் மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

மனுவில் இந்தியன் முதலாம் பாகம் தயாரித்த போது கமலஹாசன் பயன்படுத்தும் வர்மக்கலை குறித்து தன்னிடம் ஆலோசித்து அந்த முத்திரை பயன்படுத்தப்பட்டது. அதற்காக தனது பெயரும் படத்தில் இடம் பெற்றது, ஆனால் தற்போது, இந்தியன் 2 திரைப்படத்தில் கமலஹாசன் முதலாம் பாகத்தின் பயன்படுத்திய வர்மகலை முத்திரையை 2 ஆம் பாகத்திலும் அனுமதி இன்றி பயன்படுத்தி உள்ளார்.

ஆகவே இந்தியன் 2 படத்தை திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளங்கள் என எந்த வகையிலும் வெளியிட தடை விதிக்க வேண்டும் என ராஜேந்திரன் மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இம்மனு மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி செல்வமகேஸ்வரி முன் விசாரணைக்கு வந்தது, நடிகர் கமலஹாசன், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகாத நிலையில் இயக்குனர் சங்கர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி வாதாடினார்.

வர்மக்கலை ஆசான் ராஜேந்திரன் 1993 மற்றும் 1994 ஆகிய ஆண்டுகளில் எழுதியுள்ள 2 வர்மகலை புத்தகத்தில் வர்மக்கலை குறித்தும், முத்திரை குறித்தும் நுணுக்கமாக கூறப்பட்டு உள்ளது, புத்தக தகவல்களை மையமாக வைத்து ஆலோசனை செய்து இந்தியன் 1 படம் எடுக்கப்பட்டது, ஆனால் இந்தியன் 2 படத்தில் எங்களை ஆலோசிக்காமல் வர்மகலை முத்திரைகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

புத்தகங்களை தழுவியே இந்தியன் படம் உருவாக்கப்பட்டது, இந்தியன் 2 பட டைட்டில் கார்டில் வர்மக்கலை ஆசான் ராஜேந்திரன் பெயரை பதிவு செய்ய வேண்டும் என கேட்கிறோம்” என ராஜேந்திரன் தரப்பு வழக்கறிஞர் பிரபு நீதிமன்றத்தில் வாதாடினார், இந்தியன் 1 படத்தில் வர்மக்கலை தகவல் என ராஜேந்திரன் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது, ஆகவே இந்த வழக்கு ஒரு தவறான வழக்கு, ஜுலை 11 ஆம் தேதி இயக்குனர் சங்கர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படும். வர்மகலை என்பது உலக அளவில் உள்ள ஒரு கலையாகும். அகஸ்தியர் கண்டுபிடித்து வர்மகலை ஆகும்.

இந்தியன் 2 படத்தில் வர்மகலை ஆசான் பிரகாசம் குருக்கள் என்பவரை வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது, இந்தியன் படத்திற்கும் வர்மக்கலை ஆசான் ராஜேந்திரனுக்கும் எந்தவொரு தொடர்புமில்லை என இயக்குனர் சங்கர் தரப்பு வழக்கறிஞர் சாய் குமரன் நீதிமன்றத்தில் வாதாடினார், இரு தரப்பு வாதங்களையும் ஏற்றுக்கொண்ட நீதிபதி செல்வ மகேஸ்வரி படக்குழு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளித்து வழக்கு விசாரணையை ஜூலை 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Poorni

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

20 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

21 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

22 hours ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

22 hours ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

23 hours ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

23 hours ago

This website uses cookies.