மதுரையில் நள்ளிரவில் எலக்ட்ரானிக்ஸ் கடையில் தீ விபத்து : ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்!!

25 February 2021, 7:49 am
Madurai Fire - Updatenews360
Quick Share

மதுரை : மின்கசிவு காரணமாக ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5க்கும் மேற்பட்ட எலெக்ட்ரானிக் கடைகள் எரிந்து நாசமானதில் 20 லட்சம் மதிப்பலான பொருட்கள் சேதமானது.

மதுரை டவுன்ஹால் ரோடு பகுதியில் உள்ள பெருமாள் தெப்பகுளத்தை சுற்றிலும் 100க்கும் மேற்பட்ட எலெக்ட்ரானிக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு 10மணி அளவில் கடைகள் அடைக்கப்பட்ட பின்னர் சுமார் 11மணியளவில் எலெக்ட்ரானிக் கடை ஒன்றில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக அங்குள்ள எலெக்ட்ரானிக் பொருட்கள் தீயில் எறிந்ததோடு வெடிக்க தொடங்கியதில் அருகருகேயுள்ள 5கடைகளில் தீ பரவ தொடங்கியது.

தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியதால் அந்த பகுதி முழுவதிலும் நெருப்புகோளம் உருவானது போல காட்சியளித்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த 5ற்கும் மேற்பட்ட தீயணைப்புதுறை வாகனங்கள் மூலமாக 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்துசெயல்பட்டு தீயை அணைத்தனர்.

தீ பற்றிய கடையின் எதிரே கனரா வங்கி கட்டிடம் இருந்த நிலையில் தீயணைப்பு வீரர்களின் துரித மீட்பு பணியின் காரணமாக தீ பராவமல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீ விபத்து காரணமாக அந்த பகுதி முழுவதிலும் மின்தடை மற்றும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

தீ விபத்து காரணமாக கட்டிடத்தின் தன்மை குறித்து அறிந்த பின்னரே பொருட்களின் சேத விவரங்கள் குறித்து தகவல் வெளியாகும். முதற்கட்டமாக 5கடைகளிலும் 20லட்சத்திற்கு மேற்பட்ட மதிப்பிலான எலெக்ட்ரானிக் பொருட்கள் எரிந்திருக்கும் என உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி கடந்த ஆண்டுகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டுவந்த நிலையில் மீனாட்சிஅம்மன் கோவில் மேற்கு நுழைவாயில் பகுதிக்கு செல்ல கூடிய பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 107

0

0