கீழடி 7ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் ஆச்சர்யம் : ஒரே அகழாய்வு குழியில் 3 உரை கிணறு கண்டுபிடிப்பு..!!

Author: Babu Lakshmanan
16 September 2021, 4:58 pm
madurai Excavation -- updatenews360
Quick Share

சிவகங்கை : கீழடி 7ம் கட்ட அகழ்வாராய்ச்சி-அகரம் அகழாய்வு தளத்தில் ஒரே அகழாய்வு குழியில் 3 உரை கிணறுகள் இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த பிப்ரவரி 13ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 5கட்ட அகழ்வாராய்ச்சியின் தொடர்ச்சியை கண்டறியும் வகையிலும், தொன்மையான மனிதர்களின் வாழ்வியல் முறை, நம்பிக்கை, கலாச்சாரம், இன மரபியல் ஆகியவற்றை அறியும் வகையில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் விரிவான முறையில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

7ம் கட்ட அகழாய்வில் இதுவரை 25க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழி, கருப்பு சிகப்பு பானை ஓடுகள், வெளி நாடுகளால் வணிகம் மேற்கொண்டதற்கான சான்றாக செல்லட்டான், அரிட்டைன் வகை மண் ஓடுகள், அலங்காரத்துடன் கூடிய சுடுமண் பொம்மை, சங்கு வளையல்கள், பருகு நீர் குவளை,பகடைகாய், உழவுவிற்க்கு பயன்படுத்தும் கல்லால் ஆன கருவி, கருப்பு சிகப்பு நிறம் கொண்ட மண் குவளை, கருப்பு சிகப்பு நிறம் கொண்ட மண் ஓடு, வட்ட வடிவிலான சுடுமண்ணால் செய்யப்பட்ட வளையம், தங்க ஆபரண கம்பி, தங்க அணிகலன், வெள்ளி முத்திரை நாணயம், யானை தந்ததிலான பகடைக்காய், சூது பவள மணிகள், நூல் கோர்க்கும் தக்களி, சுடுமண்ணால் ஆன அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தொட்டி, உறை கிணறுகள், போர் வால் உள்ளிட்ட 3000க்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்கள் கண்டறியபட்டுள்ளது.

இந்நிலையில் அகரத்தில் நடைபெறும் அகழாய்வில் ஒரே அகழாய்வு குழியில் 3 உரை கிணறுகள் கண்டறியப்பட்டுள்ளது 3 அடுக்கு கொண்ட ஒரு உரை கிணறும் 2 அடுக்கு கொண்ட இரு உரை கிணறும் தற்பொழுது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதன் முழு வடிவத்தை வெளிக்கொணரும் பணியில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே, 4 உரை கிணறு கண்டறியப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 உரை கிணறுகள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 239

0

0