மதுரையில் பிரபல தனியார் நிறுவனத்தில் ஐடி ரெய்டு.. 3 மணிநேரத்திற்கும் மேலாக நீடிக்கும் சோதனையால் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
3 February 2023, 10:10 pm
Quick Share

உசிலம்பட்டி அருகே பிரபல தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 3 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள், மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சுரேஷ் டிம்பர்ஸ் எனும் பிரபல தனியார் நிறுவனத்திற்கு சொந்தமாக பர்னிச்சர் ஷோ ரூம், மர இழைப்பகம் மற்றும் ஜவுளி கடைகள் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்திற்கு சொந்தமான ஜவுளிக்கடை, பர்னிச்சர் ஷோரூம், மரக்கடை உள்ளிட்ட மூன்று இடங்களில் தனித்தனியாக வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து, மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் இந்த வருமான வரி சோதனையில் இந் நிறுவனம் வரி ஏற்பு ஏதும் செய்துள்ளனரா? கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்ட வாய்ப்பு உள்ளதா என்ற தகவல்கள் சோதனை முடிவில் தெரிய வரும் என தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து எழுமலையில் பிரபலமான தனியார் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 168

0

0