ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்களின் கவனத்திற்கு… இந்த 6 விஷயங்களை மறந்திறாதீங்க.. மதுரை ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Author: Babu Lakshmanan
14 January 2023, 10:20 am
Quick Share

ஜல்லிக்கட்டுக்காக காளைகளை வாகனங்களில் கொண்டு செல்லும்போது உரிய வழிமுறைகளை முறையை பின்பற்ற வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஸ் சேகர் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில், மதுரை தெற்கு வட்டம், அவனியாபுரம் கிராமத்தில் வருகிற 15.01.2023-ஆம் தேதியன்றும், வாடிப்பட்டி வட்டம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் கிராமங்களில் முறையே 16.01.2023 மற்றும் 17.01.2023-ஆம் தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு இணைய வழி பதிவு அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளை வாகனங்களில் கொண்டு வரும்போது பின்வரும் சான்றிதழ்/விபரங்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்:

  1. காளை பரிசோதனை சான்றிதழ்
  2. காளை இனம் தொடர்பான சான்றிதழ்
  3. காளை கொண்டு செல்லும் வாகன பதிவு சான்றிதழ்
  4. காளையின் வயது குறித்த சான்றிதழ்
  5. காளை எந்த இடத்தில் இருந்து எந்த இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்த விபரம்.
  6. காளைக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது தொடர்பான சான்றிதழ்.

ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வதற்காக வாகனங்களில் காளைகளை கொண்டு செல்லும் உரிமையாளர்கள் மேற்குறிப்பிட்டுள்ள சான்றிதழ்/விவரங்களை கட்டாயம் உடன் வைத்திருக்க வேண்டும். மேற்குறிப்பிட்டுள்ள ஆவணங்களை சமர்ப்பிக்கும் காளை உரிமையாளர்களுக்கு மட்டுமே காவல் சோதனைச்சாவடிகளில் அனுமதி வழங்கப்படும், என மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஸ் சேகர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Views: - 339

0

0