முதுகலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்களா..? காமராஜர் பல்கலை. முக்கிய அறிவிப்பு

1 August 2020, 2:15 pm
Madurai Kamarajar Univ - Updatenews360
Quick Share

மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பு ஆன்லைன் நுழைவு தேர்வு விண்ணப்பம் இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 5 மாதங்களுக்கும் மேலாக தமிழகத்தில் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு உள்ளன.

அதே நேரத்தில் வரும் கல்வி ஆண்டு முதுகலை படிப்புக்கு நுழைவு தேர்வு எழுத விரும்புவோருக்கு விண்ணப்பபடிவங்கள் இணையதளம் மூலமாக வெளியிடப்படுகிறது.

இதையடுத்து, தற்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் முதலாமாண்டு சேர்க்கை விண்ணப்பங்கள் பெறுவது பல்கலைக்கழக இணையதளம் வாயிலாக தொடங்கி இருக்கிறது.

முதுகலை பட்டப் படிப்புகளில் சேர விரும்புவர்கள் ஆன்லைன் மூலம் நுழைவுத் தேர்வு எழுதலாம். அதற்கான விண்ணப்பத்தை www.mkuniversity.ac.in என்ற இணையதள முகவரி வழியாக மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மதுரை காமராஜர் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் வசந்த் அதிகாரப்பூர்மாக அறிவித்துள்ளார்.

Views: - 32

0

0