மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பக்தர்களுக்கு அன்னதானம் ‘பார்சல்’ : கொரோனாவால் வந்தது புதிய முறை..!!

3 March 2021, 7:40 pm
Madurai temple food - updatenews360
Quick Share

மதுரை : கொரோனா ஊரடங்கு எதிரொலியால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று முதல் பக்தர்களுக்கு அன்னதானம் பார்சல் மூலம் வழங்கப்பட்டது.

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்கு மதியம் நேரத்தில் கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோவில் வளாகத்திற்குள் பக்தர்கள் அமர தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவிலுக்கு வெளியே பலர் சாப்பாடு இன்றி தவித்து வருவதாக தகவல் வந்தது. இதையடுத்து, கோவில் நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு வகையான கலவை சாதங்கள் பார்சலாக கட்டி காலை நேரத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனா பரவல் காரணமாக ஒரு வருடத்திற்கு பின் கோவிலில் 4 வாசல்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், முதியோர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவில் நிர்வாகம் இன்று முதல் கோவிலுக்குள் பக்தர்களுக்கு மதியம் வழங்கப்பட்ட அன்னதானத்தை மீண்டும் செயல்படுத்த திட்டமிட்ட நிலையில், பக்தர்களுக்கு அன்னதானத்தினை பார்சலாக கட்டி வழங்கப்பட்டு வருகிறது. சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு மீண்டும் இன்று முதல் கோவிலுக்குள் அன்னதானம் வழங்கப்பட இருப்பது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைகளில் அன்னதான பார்சலோடு வரும் பக்தர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

Views: - 1

0

0