பக்தர்களுக்கு காட்சி தந்த மீனாட்சி : ஆனா ‘இதுக்கு‘ அனுமதி இல்ல!!

1 September 2020, 11:44 am
Madurai Meenkashir- Updatenews360
Quick Share

மதுரை : தமிழக அரசின் உத்தரவுப்படி இன்று முதல் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் வழிபாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்கப்பட்டுள்ளது.

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் பக்தர்கள் வழிபாட்டிற்காக இன்று காலை 6 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையிலும் மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

மேலும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சாமி தரிசனத்திற்கு அம்மன் சன்னதி கிழக்கு வாசல் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

மேலும் கொரோனா வைரஸ் காரணமாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும் மேலும் 10 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமிகள் கர்ப்பிணி பெண்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் நோய்வாய்ப்பட்டவர்கள் திருக்கோவிலில் உள்ளே வர அனுமதி இல்லை.

பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்தும். கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்பு திருக்கோவிலுக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.இதில் உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தாலும் திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

திருக்கோயிலுக்குள் தேங்காய், பழம், மாலை, கொண்டுவர தடை செய்யப்பட்டு உள்ளது. அர்ச்சனை செய்வதற்கும் அனுமதி இல்லை. பக்தர்கள் திருக்கோவில் அம்மன் சன்னதி கிழக்கு வாசல் வழியாக நுழைந்து அஷ்டசக்தி மண்டபம், மீனாட்சி நாயக்கர் மண்டபம், இருட்டு மண்டபம், பொற்றாமரைக்குளம். கிழக்குப்பகுதி, தெற்கு பகுதி மற்றும் கிளிக்கூடு மண்டபம், கொடிமரம் வழியாக அம்மன் சன்னதிக்குள் உள்ளே நுழைந்து தரிசனம் செய்துவிட்டு பின் சுவாமி சன்னதி சென்று தரிசனம் செய்து சனீஸ்வரர் சன்னதி அக்னி வீரபத்திரர், அகோர வீரபத்திரர், பத்திரகாளி அருகிலுள்ள வழியில் வெளியில் வந்து பழைய திருக்கல்யாண மண்டபம் வழியாக அம்மன் சன்னதி கிழக்கு வாசல் வழியாக வெளியே பொதுமக்கள் செல்ல வேண்டும். மேலும் குங்குமம், விபூதி பிரசாதம், அர்ச்சகர்கள் நேரடியாக வழங்க தடை செய்யப்பட்டுள்ளது.

திருக்கோவில் நிர்வாகம் மூலம் பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனத்தில் ஈடுபட்டனர். பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு திருக்கோவிலில் எந்த ஒரு இடத்திலும் பக்தர்கள் அமருவதற்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 10

0

0