மதுரையில் எஸ்.பி.பி.க்கு இசையஞ்சலி செலுத்திய மெல்லிசை கலைஞர்கள் : எஸ்பிபியின் பாடலை பாடி கண்ணீர்!!

25 September 2020, 7:47 pm
SPB Tribute- updatenews360
Quick Share

மதுரை : மெல்லிசை கலைஞர்கள் பாடகர் எஸ்.பி.பி மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் எஸ்.பி.பி குரலில் உருவான பாடல்களை பாடி புகழஞ்சலி செலுத்தினர்.

இந்தியாவின் புகழ்பெற்ற பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் கொரைனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மறைந்தார், எஸ்.பி.பி யின் மறைவை அடுத்து எஸ்.பி.பி க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மதுரை மாவட்ட மேடை மெல்லிசை மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் எஸ்.பி.பி யின் படத்திற்கு மேடை கலைஞர்கள் பூக்கள் தூவி புகழஞ்சலி செலுத்தினார்கள்,

பின்னர் “சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம், மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையோ, என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய், நானாக நானில்லை தாயே நல்வாழ்வு தந்தயே நீயே, உனக்கென்ன மேலே நின்றாய் ஒ நந்தலாலா, இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல், மலரே மௌனமா மௌனமே வேதமா, வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ உள்ளிட்ட 8 பாடல்களை பாடினார்கள்,

வண்ணம் கொண்ட வெண்ணிலவே என்கிற பாடல்களை அனைத்து பாடகர்களும் கண்ணீர் மல்க ஒருங்கிணைந்து பாடினார்கள், மேடை பாடகர் அய்யனார் கூறுகையில் “உலக மக்களை இசையின் மூலம் குணமாக்கியவர் எஸ்.பி.பி, இசை ஜாம்பவானாக திகழ்ந்த எஸ்.பி.பி மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனதை விட்டு எஸ்.பி.பி மறையவில்லை” என கூறினார்.