அமைச்சர் செல்லூர் ராஜு அணியும் ID CARD ரகசியம்.! மர்மம் விலகியது.!!

3 August 2020, 4:01 pm
Sellur Raju Id Card - Updatenews360
Quick Share

மதுரை : கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அணிந்து வரும் ஐடி கார்டு ரகசியம் குறித்த தகவல் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு வின் மனைவிக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார். அவரது மனைவியை பார்ப்பதற்காக அமைச்சர் அடிக்கடி மருத்துவமனை சென்று வந்ததில் இவருக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டது.

இருவரும் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு பூரண குணமடைந்து மதுரை திரும்பினர். இந்த நிலையில் மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு நிவாரணம் வழங்கி வருகிறார்.

இப்படி அமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் அவர் கழுத்தில் ஒரு ஐடி கார்டு தவறாமல் இருந்து வந்துள்ளது. இதை அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்து வந்த நிலையில் அந்த ஐடி கார்டின் மர்மம் தற்போது வெளியாகியுள்ளது.

இது சம்பந்தமாக விசாரித்தபோது அந்த ஐடி கார்டில் Anti Virus என்னும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாகவும், மருத்துவமனையிலிருந்து பூரண குணமடைந்து செல்லும்போது மருத்துவர்கள் இதை கொடுத்து வெளியே செல்லும்போது இதை அணிந்து செல்லுங்கள் என அறிவுறுத்தியுள்ளனர்.

அதன்படி தொடர்ந்து வெளியே செல்லும்போது Anti Virus ஐடி கார்டை அணிந்து வருவதாக அமைச்சர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. வெகுநாளாக நோட்டமிட்டு சந்தேகமடைந்தவர்களுக்கு இப்போது இந்த ஐடி கார்டு மர்மம் தெளிவாகியுள்ளது.

Views: - 8

0

0