சாக்கு பையில் சடலம்: ஒரு பெண் உள்பட மூன்று பேர் கைது

By: Udayaraman
15 October 2020, 11:11 pm
Quick Share

மதுரை: மேலூர் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரு பெண் உள்பட மூன்று பேரை கைது போலீசார் செய்து போலீசார் விசாரித்து வருகின்றார்.

மதுரை மேலூர் அருகே தெற்குப்பட்டி என்ற இடத்தில் பெரியார் பிரதான கால்வாயில் சாக்கு பையில் கட்டப்பட்டு கழுத்து, தலை ஆகிய பகுதிகளில் வெட்டப்பட்ட நிலையில் வாலிபரின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

அதில் வாலிபர் மேலூர் பகுதி ஆட்டுக்குளத்தைச் சேர்ந்த மதன்குமார் என்பதும், சிவில் எஞ்சினியரிங் முடித்துவிட்டு கான்ராக்ட் வேலை செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் சந்தேகத்தின் பேரில் அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட மூன்று நபர்களை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றார்.மேலூர் பகுதியில் அடுத்தடுத்து கொலைச் சம்பவங்கள் நடைபெறுவது அப்பகுதி மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 43

0

0