என்ன செய்யறீங்க.? டெங்கு காய்ச்சலால் குழந்தை பலி.. சீக்கிரமா நடவடிக்கை எடுங்க ; ஆட்சியருக்கு ஆர்பி உதயகுமார் அவசர கடிதம்!!
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் மதுரை மாவட்ட ஆட்சியருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது, மதுரை மாவட்டத்தில் மதுரை நகர், ஊரக பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் டெங்கு வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருகின்றன.
அரசு மருத்துவமனைகளில் தினசரி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 75க்கும் அதிகமானோர் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் 20 மேற்பட்ட டெங்கு நோயாளிகளும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதே போல தனியார் மருத்துவமனையில் பலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஐந்து நாட்களாக கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள 41 வயதான சத்யபிரியா அந்த பகுதி உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமாகாதால், மாட்டுத்தாவணி உள்ள தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு டெங்கு பாதிப்பு இருந்தது அடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் அவர் தற்போது உயிரிழந்திருக்கிறார்
இதேபோல திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட ஜெ.ஆலங்குளம் பகுதியில் சேர்ந்த கண்ணன் அவர்களின் ஏழு மாத பெண் குழந்தை அனன்யா கடந்த ஒரு மாத காலமாக காய்ச்சல், சளி தொந்தரவு இருந்து வந்த நிலையில் திருமங்கலம் அரசு மருத்துவமனை சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில் மூச்சு திணறல் ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயர்ந்திருந்தார்.
ஆகவே மாவட்ட ஆட்சியர் மதுரையில் சுகாதாரத் துறையினர் மூலம், காய்ச்சல் தடுப்பு பணிகளை தீவிரபடுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இந்த கடிதத்தின் வாயிலாக கேட்டு கொள்கிறேன்.
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் பேருந்து நிறுத்தம்அருகில் அமுதம் ஓட்டல் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன் அவருடைய…
This website uses cookies.