கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக சலூன் மோகன் மீது போலீஸில் புகார்..!

23 September 2020, 11:39 am
Madurai Mohan - updatenews360
Quick Share

மதுரை : அதிக வட்டி கேட்டு மிரட்டுவதாக சலூன் கடையின் உரிமையாளர் மோகன் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஆரம்ப காலத்தில் மகளின் கல்விச் செலவுக்காக வைத்திருந்த ரூ. 5 லட்சத்தை கொரோனா தடுப்பு நிதிக்காக வழங்கியதுடன், ஊரடங்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கி உதவியும் செய்து வந்தார். இவரது இந்த சேவையை மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பாராட்டி பேசினார். மேலும், அவரது மகளின் கல்விச் செலவையும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து, அண்மையில் பா.ஜ.க.வில் குடும்பத்துடன் சேர்ந்தார்.

ஆனால், பா.ஜ.க.வில் சேருவதற்கு முன்னதாக பல்வேறு மிரட்டல்கள் தனக்கு வந்ததாக அவர் கூறி வந்தார். இந்த நிலையில், கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக சலூன் கடை உரிமையாளர் மோகன் மீது கங்கை ராஜன் என்பவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகார் மனுவில், மருத்துவ செலவுக்காக வாங்கிய ரூ.30,000த்தை வட்டியுடன் திருப்பி கொடுத்த பிறகும், மேலும் பணம் தருமாறு மிரட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில் மோகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Views: - 5

0

0