கந்து வட்டி கேட்டு மிரட்டிய வழக்கு : மதுரை சலூன் கடை உரிமையாளர் மோகனுக்கு முன்ஜாமீன்..!

25 September 2020, 8:09 pm
Madurai Mohan - updatenews360
Quick Share

சென்னை : கந்து வட்டி கேட்டு மிரட்டிய வழக்கில் மதுரையைச் சேர்ந்த சலூன் கடை உரிமையாளர் மோகனுக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

முழுத் தொகை கொடுத்த பிறகும், மேலும் பணத்தை கேட்டு மிரட்டுவதாக மதுரையைச் சேர்ந்த சலூன் கடை உரிமையாளர் மோகன் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “நான் 30 ஆயிரம் கடன் வழங்கி கடன் தொகை 30 ஆயிரத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, அந்தப் பணத்திற்கு வட்டி கேட்கப்பட்டதாக பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காலத்தில் மிகப்பெரிய பணத்தை ஏழை, எளிய மக்களுக்கு காய்கறி உணவு வழங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு, UNESCO மற்றும் பல அமைப்புகளிடம் பாராட்டு பெற்றுள்ளேன். இதனை கெடுக்கும் விதமாக என் மீது பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி மனுதாரர் தரப்பில் வட்டிக்கு பணம் கொடுக்கவில்லை என்றும், வட்டி கேட்டு ஏதும் விரட்ட மாட்டோம், அடமான பாத்திரங்கள் எதுவும் எழுதி வைக்கவில்லை என்றும் உறுதிமொழி கொடுத்தால் முன்ஜாமின் வழங்குவதாக நீதிபதி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில் அவரது வழக்கறிஞர் மூன்று கோரிக்கைகளுக்கும் உறுதிமொழி வழங்கியதைத் தொடர்ந்து, நீதிபதி முன் ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.