‘உயிருக்கு அச்சுறுத்தல்‘ என்பதால் பாஜகவில் இணைந்தேன் : மதுரை சலூன்கடைக்காரர் பேட்டி!!

9 September 2020, 5:49 pm
Madurai Mohan - updatenews360
Quick Share

மதுரை : பிரதமர் மோடியால் பாராட்டப்பெற்ற முடி திருத்தும் தொழிலாளி மோகன் பாஜகவில் இணைந்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

மதுரை அண்ணாநகர் நெல்லை வீதியில் வசித்து வருபவர் முடி திருத்தகத் தொழிலாளி மோகன், இவர் மேலமடை பகுதி அருகே முடிதிருத்தக கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

கொரோனா ஊரடங்கின் போது அவர் தனது பகுதியில் ஏழை, எளிய மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். கொரோனா ஊரடங்கால் மக்கள் படும் துன்பத்தைக் கண்டு, தனது மகளின் எதிர்கால நலனுக்காக சேமித்து வைத்த ரூ.5 லட்சம் பணத்தை பொது மக்களுக்கு நிவாரணப் பொருட்களாக கொடுத்து உதவினார்.

இந்நிலையில் முடி திருத்தகத் தொழிலாளியின் இந்த மனித நேயத்தை இந்தியப் பிரதமர் மோடி கடந்த மே 31-ஆம் தேதி அனைத்திந்திய வானொலியில் மனதின் குரல் நிகழ்ச்சியில் பாராட்டிப் பேசியிருந்தார், அதனை தொடர்ந்து அவர் மகள் நேத்ராவை ஐநா-வின் அங்கீகரிக்கப்பட்ட UNDAP அமைப்பின் நல்லெண்ணத் தூதராக அறிவித்து கெளரவப்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்பு சலூன்கடை மோகன் பாஜகவில் இணைந்ததாக கூறப்பட்ட நிலையில், தான் பாஜகவில் இணையவில்லை எனத் தெரிவித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பாஜகவில் தற்போது மோகன் அதிகாரப்பூர்வமாக தனது நண்பர்கள், உறவினர்கள் என 300க்கும் மேற்பட்டோருடன் பாஜகவின் பொதுச் செயலாளர் சீனிவாசன் முன்னிலையில் இணைந்தார். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்பு சிலர் அச்சுறுத்தியதால் பாஜகவில் சேரவில்லை என்றும், தற்போது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாஜகவில் இணைந்ததாக தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0