இதென்னடா ரயில் பயணிகளுக்கு வந்த சோதனை : மதுரை – செங்கோட்டை சிறப்பு ரயில் ரத்து.. இன்று முதல் 6 நாட்களுக்கு ரத்து செய்வதாக அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
5 September 2022, 10:13 am
SPl Train - Updatenews360
Quick Share

ராஜபாளையம் – சங்கரன்கோவில் இடையே ரெயில் பாதை பலப்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது. இதனால் மதுரையில் காலை 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை – செங்கோட்டை (06663) மற்றும் செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை – மதுரை (06664) முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில்கள் இன்று முதல் வருகிற 10-ந் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

இந்த தகவல் மதுரை ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க மைசூரு- திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில் இயக்க தென்மேற்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி மைசூரு – திருவனந்தபுரம் சிறப்பு ரெயில் (06201) வருகிற 7-ந் தேதி மதியம் 12.15 மணிக்கு மைசூருவில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு நெல்லைக்கு வருகிறது. இங்கிருந்து 4.35 மணிக்கு புறப்பட்டு காலை 7.30 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரெயில் (06202) 8-ந் தேதி மதியம் 12.45 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு மாலை 4.15 மணிக்கு நெல்லைக்கு வருகிறது. 4.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 11.45 மணிக்கு மைசூரு சென்றடைகிறது.

இந்த ரெயில்கள் மாண்டியா, கெங்கேரி, பெங்களூரு, கண்டோன்மென்ட், ஓசூர், தர்மபுரி, ஓமலூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, நெல்லை, நாகர்கோவில் டவுன் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இதில் 1 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன வசதி மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Views: - 358

0

0