மதுரையில் கோவில் பூசாரி படுகொலை : கோவில் வாசலிலேயே வெட்டிச் சாய்த்த மர்மகும்பல்!!

Author: Udayachandran
10 October 2020, 4:29 pm
Madurai Murder - Updatenews360
Quick Share

மதுரை : பாண்டி கோவில் வளாகத்தில் உள்ள ஆண்டிச்சாமி கோவில் முன்பு துணை பூசாரி மர்ம கும்பலால் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார்.

மதுரையில் மிகவும் பிரபலமான கோவிலாக பாண்டி கோவில் உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். இந்த நிலையில் இந்த கோவிலில் பூசாரியாக மதுரையை ஆண்ட வட்டாரத்தைச் சேர்ந்த குருசாமி மகன் முத்துராஜா என்பவர் இருந்து வந்துள்ளார்.

இவர் இன்று மதியம் 3 மணி அளவில் கோவில் அருகே இருந்த போது வாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார். உடனடியாக தகவல் அறிந்து வந்த அண்ணாநகர் காவல் துறை காவல்துறை உயரதிகாரிகள் சஉடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது காவல்துறை அதிகாரிகள் கொலையாளிகள் விட்டுச்சென்ற தடயங்களையும் சேகரித்தனர். அங்கு ஒரு கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை எம் எடுத்து கொலையாளி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஒரு வருடத்திற்கு முன்பு காதுகுத்து விழாவில் முத்துராஜாவுக்கும் வேறு ஒரு கும்பலுக்கும் தகராறு நடைபெற்று வந்ததாகவும் அதற்கு பழிக்குப்பழியாக வாங்கலாம் என்பது குறித்தும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Views: - 58

0

0