இது அருவியா… இல்ல குடிநீர் தொட்டியா..? வெளியேறிய தண்ணீரில் ஆனந்த குளியல் போடும் இளைஞர்கள்… வைரலாகும் வீடியோ!!!

Author: Babu Lakshmanan
21 May 2024, 3:52 pm

கூட்டுக் குடிநீருக்காக கட்டப்பட்ட தொட்டியில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் போது, அருவி போல் கொட்டும் தண்ணீரில் ஆனந்த குளியல் போடும் இளைஞர்களின் வீடியோ வைரலாகி வருகிறது.

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே இருக்கக்கூடிய உயர் மட்ட தொட்டி அருகில் புதிதாக கூட்டு குடிநீர் திட்டத்திற்காக கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக உயர்மட்ட தொட்டியில் தண்ணீர் தேங்கிய நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: குடியரசு தலைவருக்கே இந்த நிலைமையா..? இதுதான் பாஜக ஆட்சி ; கோபத்தில் கொந்தளித்த கனிமொழி..!!!

அந்தப் பகுதி வழியாக சென்ற வாகன ஓட்டிகள் உற்சாக மிகுதியில் உயர்மட்ட தொட்டியில் இருந்து வரும் தண்ணீரில் குளித்தவாறும், அந்த வழியே செல்கின்ற ஆட்டோ டிரைவர் இந்த தண்ணீரை பயன்படுத்தி தனது ஆட்டோவை சுத்தப்படுத்தும் நிகழ்வும் அரங்கேறி வருகிறது.

இதனிடையே, கூட்டுக் குடிநீர் உயர்மட்ட தொட்டி இன்னும் முழுமையாக பயன்பாட்டுக்கு வரவில்லை என்றும், சோதனை முயற்சியில் தற்போது தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது எனவும், கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக தொட்டியில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருவதாகவும் மதுரை மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.

  • New Update Announcement From Jana Naygan team Today ஜனநாயகன் படத்தின் மாஸ் அப்டேட்.. இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு!