பைக்கில் சென்றவரை அரிவாளால் தாக்கிய இளைஞர்கள் : ‘ஷாக்‘காட்சி!!

18 September 2020, 10:42 am
Madurai CCTV- updatenews360
Quick Share

மதுரை : இருசக்கர வாகனத்தில் சென்றவரை அரிவாளால் வெட்டி வழிப்பறி செய்யும் என்று இளைஞர்கள் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.

மதுரை சோலை அழகுபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா, இவர் வீரகனூர் பகுதியில் பணியை முடித்துவிட்டு மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகே வந்தபோது பின்தொடர்ந்து வந்த இரண்டு இளைஞர்கள் அவர்கள் வைத்திருந்த அரிவாளால் ராஜாவை பயங்கரமாக வெட்டி விட்டு அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறிக்க முயன்றனர்.

அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம், வழிப்பறி கும்பல் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. உடனே அவ ராஜா மற்றும் உடன் வந்த வரும் வழிப்பறி கும்பலை பிடிக்க முயன்ற போது இருவரும் பயங்கர ஆயுதங்களால் வெட்டி விட்டு தப்பி ஓடினார், ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜாவை மீட்ட பொதுமக்கள் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சம்பவம் குறித்து ராஜா அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த தெப்பக்குளம் காவல்துறையினர் அந்த பகுதி உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது அந்த சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் மக்கள் அதிக நடமாட்டம் உள்ள பொது இடத்தில் பயங்கர ஆயுதங்களால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.