விஜயகாந்த் பாணியில் பேசிய அரசு பெண் அதிகாரி.! கோப்புகளை தூக்கி அடித்து எச்சரிக்கை!!

11 August 2020, 12:04 pm
Madurai Officer Angry - Updatenews360
Quick Share

மதுரை : திருமங்கலம் அருகேயுள்ள கல்குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி விவசாயிகள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமரச பேச்சுவார்த்தை நடத்திய போது திடீரென கோபமுற்று கிராம பிரதிநிதியை நோக்கி கோட்டாட்சியர் கோப்புகளை எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு அருகேயுள்ள கருவேலம்பட்டி பகுதியில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான கல்குவாரியில் கிரசர் இயந்திரத்தில் இருந்து வெளிவரும் தூசியினால் அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள் மற்றும் சுற்றுப்புறச் சூழலுக்கு அதிகஅளவில் மாசுபடுவதால் அதனை நிரந்தர மாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர்.

இந்த பிரச்சினை குறித்து இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்த மதுரை மாவட்டம் திருமங்கலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் சௌந்தர்யா தலைமையில் இரு பிரிவினர்களுக்கும் தலா 5 பேர் வீதம் அழைப்பு விடுத்த நிலையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் முன்பு கருவேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டதால் பரபரப்பு நிலவியது.

தொடர்ந்து இரு தரப்பினருக்குமிடையான பேச்சுவார்த்தை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் சௌந்தர்யா மற்றும் திருமங்கலம் துணை காவல் கண்காணிப்பாளர் வினோதினி முன்னிலையில் நடைபெற்றது, இதில் எந்தவித சமரசம் எட்டப்படாத நிலையில் கோட்டாட்சியர் சௌந்தர்யா மீது கிராம பிரதிநிதி ஒருவர் ஒருதலை பட்சமாக செயல்படுவதாத நேரடியாக குற்றம் சாட்டினார்.

இதனால் ஆத்திரமுற்ற கோட்டாட்சியர், குற்றச்சாட்டு ஆதாரம் இருக்கிறதா என கேட்டார். ஆனால் பிரதிநிதியான சரவணன் கோட்டாச்சியரின் கேள்விக்கு பதிலளிக்காமல் செல்போனை நோண்டிக் கொண்டிருக்க, உடனே ஆவேசமடைந்த ஆர்டிஓ சௌந்தர்யா, சரவணன்மீது கோப்புகளை தூக்கி எறிந்து அங்கிருந்து சென்றார்.

தொடர்ந்து கல்குவாரியை நிரந்தரமாக மூடும் வரை கிராம மக்களை திரட்டி பல்வேறு கட்ட நடவக்கையில் போராட்டம் தொடரும் என்று கூறி கலைந்து சென்றனர். ஆதாரம் உண்டு என்றால் அதை சமர்பித்து கேள்வி கேட்பதில் தவறில்லை, ஆனால் ஆதாரம் இல்லாமல் ஒருவரை குறை சொல்வது என்ன நியாயம்.

Views: - 1

0

0