குமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர ஆரத்தி: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்பு

Author: Udhayakumar Raman
20 October 2021, 10:14 pm
Quick Share

கன்னியாகுமரி: கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஐப்பசி மாத பவுர்ணமி நாளான இன்று மகா சமுத்திர ஆரத்தியில் வழிபாட்டில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்றார்.

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஐப்பசி மாத பவுர்ணமி நாளான இன்று மகா சமுத்திர ஆரத்தி நடைபெற்றது. குமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவை சார்பில் இன்று மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணிவரை மகா சமுத்திர ஆரத்தி வழிபாடு நடைபெற்றது.இதையொட்டி மாலை 5 மணிக்கு கடற்கரையில் அமைந்துள்ள பரசுராம விநாயகர் கோயில் முன்பு பக்தர்கள் சங்கமிக்கும் நிகழ்வும் ,மாலை 5.15 மணிக்கு பஞ்ச சங்கு நாதம் தொடர்ந்து மாதா பிதா குரு வேண்டல், குலதேவதை, இஷ்ட தேவதை, கிராம தேவதை வேண்டுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தொடர்ந்து மாலை 5.45 மணிக்கு சப்த கன்னிகள் பூஜையை தொடர்ந்து 6 மணிக்கு 27 சுமங்கலிகள் அகல் தீபத்துடன் நெய்தீபம் ஏற்றுதலும், இரவு 7 மணிக்கு சமுத்திர அபிஷேகம், இரவு 7.30 மணிக்கு தூபம் ஆரத்தி எடுக்கும் நிகழ்வு நடந்தது.ஆர்த்தி நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி,பச்சைமால் கன்னியாகுமரி தொகுதி எம்எல்ஏ தளவாய்சுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவை தலைவர் எஸ்.ராஜகோபால், பொதுச்செயலர் சிவசுப்பிரமணியபிள்ளை, பொருளாளர் என்.காமராஜ், ஒருங்கிணைப்பாளர் கனகராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Views: - 414

0

0