மகாத்மா காந்தி நினைவு தினம் : ஆளுநர், முதலமைச்சர் மரியாதை
Author: kavin kumar30 ஜனவரி 2022, 1:23 மணி
புதுச்சேரி : மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தேசப்பிதா மகாத்மா காந்தியின் 75வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது, இந்நிலையில் புதுச்சேரி கடற்கரையில் சாலையில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது, புதுச்சேரி செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை
செலுத்தினர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசபக்தி பாடல்கள் இசைக்கப்பட்டது. பின்னர் அனைவரும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
0
0