கொங்கு மண்டலத்தில் தி.மு.க., கொடியை நாட்டப்போகிறாரா மகேந்திரன்? கொதிப்பில் உடன் பிறப்புகள்!!

17 July 2021, 11:46 am
Mahendran Stalin - Updatenews360
Quick Share

கோவை, திருப்பூர், ஈரோடு உட்பட மேற்கு மண்டத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்கள் அ.தி.மு.க.,வின் கோட்டைகளாக உள்ளன. தற்போது அதிமுக கொறடாவாக இருக்கும் கோவை தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ எஸ்.பி.வேலுமணி, தலைமை தனக்கு கொடுத்த பொறுப்பை கணக்கட்சிதமாக மேற்கொண்டு கொங்கு மண்டலம் என்று அழைக்கப்படும் மேற்கு மண்டலத்தில் அதிக தொகுதிகளை அ.தி.மு.க.,வுக்கு உரித்தாக்கியுள்ளார்.

MLA not invited for inauguration, DMK cadre stage black flag stir- The New  Indian Express

கோவையைப் பொறுத்தவரை 10 தொகுதிகளில் ஒன்பதில் அதிமுக, ஒன்றில் அதிமுக.,வின் கூட்டணிக்கட்சியான பாஜக என 10 தொகுதிகளுன் அதிமுக வசம் சென்றதால் உச்சக்கட்ட கடுப்பில் ஸ்டாலின் இருக்கிறார்.

BJP can be an electoral liability in Tamil Nadu. Why is AIADMK toeing its  line?

இதனால் கோவை திமுக நிர்வாகிகள் மீதும் கோபத்தில் இருக்கிறார். இந்த சூழலை தன்வசமாக்கிக் கொள்ள முயன்று வருகிறார் மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவராக இருந்து அக்கட்சியில் இருந்து விலகிய மகேந்திரன்.

Former MNM vice-president Mahendran joins DMK - The Week

சிங்காநல்லூர் தொகுதியில் திமுக படுதோல்வியடைய முக்கிய காரணம் மகேந்திரன். குறிப்பாக முன்னாள் திமுக எம்.எல்.ஏ நா.கார்த்திக் தான் வசிக்கும் வார்டில் கூட மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார் என்றால் அதற்கு முழு காரணமாக மகேந்திரனைப் பார்க்கின்றனர் திமுக தொண்டர்கள்.

Will go ahead with the protest", says MLA Karthik after permission been  denied by City Commissioner - Simplicity

அதிமுக.,வுடன் மகேந்திரன் டீலிங் வைத்துக் கொண்டு தன்னை திட்டமிட்டு தோல்வி அடைய வைத்ததாக, நா.கார்த்திக் வெளிப்படையாகவே விமர்சித்திருந்தார்.

இதனிடையே தேர்தல் முடிந்த கையோடு மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய மகேந்திரன் கடந்த 8ம் தேதி திமுக.,வில் இணைந்தார். அவர் திமுக.,வில் இணையப் போகிறார் என்ற தகவல் அறிந்ததுமே கோவை திமுக நிர்வாகிகளுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

Former MNM vice-president R Mahendran joins DMK | Cities News,The Indian  Express

காரணம் மகேந்திரன் பண பலம் மிக்கவர், ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டு கோவை மக்களவைத் தொகுதிக்கான தேர்தலிலும் , 2021 சட்டமன்ற தேர்தலில் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டு மக்களுக்கு சற்று பரிட்சியமானவர்.

திமுக.,வில் மகேந்திரன் இணைந்ததும் “மகேந்திரனெல்லாம் முன்னாடியே வந்திருந்தால், அந்த வருத்தம் இருந்திருக்காது. கொங்கு மண்டலத்திலும் வெற்றி பெற்றிருக்க முடியும்” என்று அறிவித்தார் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின். அவ்வாறு கூறியதன் மூலம் மகேந்திரன் தலையில் கிட்டத்தட்ட மகுடம் ஒன்றைச் சூட்டினார்.

இதனால் மகேந்திரனுக்கு மாநில அளவிலோ அல்லது மாவட்ட அளவிலோ சிறப்பான பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில செயலாளர் பதவி மகேந்திரனுக்கு கிடைக்கும் என்று கட்சி வட்டாரங்கள் பேசிக்கொண்டிருக்கின்றன.

MK Stalin – Mahendran | Bhoomitoday

இதனிடையே பொள்ளாச்சியை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும், ஆரம்பம் முதலே கோவை மாநகரை குறி வைத்து களம் காணும் மகேந்திரன், வரும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் கவுன்சிலர் சீட் கேட்பார் என்ற யூகம் எழுந்துள்ளது.

கோவையில் சமீபத்தில் அனைத்து இடங்களிலும் மகேந்திரன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில், கோவை மாவட்டத்தின் திமுக பிரதிநிதியாக மகேந்திரன் தன்னை பிரகடனப்படுத்த முயன்றிருப்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.

ஒரு அரசியல் போஸ்டர் ஒட்டப்படுகிறது என்றால் கட்சியின் மாநில அளவிலான சீனியர் நிர்வாகிகள் அல்லது தலைவர்களின் புகைப்படத்தோடு மாவட்ட அளவிலான சீனியர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றிருக்கும்.

ஆனால், மகேந்திரனுக்காக ஒட்டப்பட்ட போஸ்டர்களில் மாவட்ட அளவிலான சீனியர் ஒருவரது புகைப்படமும் இடம்பெறவில்லை. கமலிடம் பாடம் படித்து அவரையே தூக்கி சாப்பிட்ட மகேந்திரனுக்கு இந்த குறைந்தபட்ச அரசியல் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை.

கோவையில் திமுக.,வை தூக்கி நிறுத்தப்போகும் ஆளுமை போல் தன்னை மகேந்திரன் நினைக்கிறார் என்றும், எங்கள் அரசியலை அவர் நேரடியாக சந்திக்கும் போது அரசியலில் தான் ஒரு குழந்தை என்பதையும் மகேந்திரன் அறிந்து கொள்வார் என்கின்றனர் உடன்பிறப்புக்கள்.

கோவை மாநகராட்சிக்கான மேயர் பதவி பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனால் வரும் உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கி கவுன்சிலராக வெற்றி பெற்று துணை மேயராக வலம் வரலாம் என்று மகேந்திரன் கணக்குப்போட்டுக் கொண்டு தன்னை இப்படி முன்னிறுத்திக் கொண்டிருக்கிறார் என்றும், திமுக தலைமை புதிதாக வரும் நபரை இப்படி கொண்டாடியிருக்கக் கூடாது என்றும் தொண்டர்கள் எரிச்சலைக் கொட்டிக் கொண்டிருக்க, முன்னாள் எம்.எல்.ஏ நா.கார்த்திக் கடும் புகைச்சலில் இருக்கிறார்.

திமுகவில் இணைந்த மகேந்திரன்; லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்திருக்கிறார்:  முதல்வர் ஸ்டாலின் பேச்சு | MK Stalin on Mahendran - hindutamil.in

எம்.எல்.ஏ ஆகி இருந்தால், நிச்சயம் அமைச்சர் பதவி என்ற நா.கார்த்திக்கின் கனவை தவிடுபொடியாக்கியவர் மகேந்திரன்..! சரி, துணை மேயர் என்ற அந்தஸ்தாவது பெறலாம் என்று சிலாகித்துக் கொண்டிருந்த கார்த்திக், தற்போது மகேந்திரன் வரவால் கதிகலங்கி நிற்கிறார்.

ஏற்கனவே நா.கார்த்திக் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட பையா கவுண்டர் ஆகிய இருவர் இடையே யாருக்கு அமைச்சர் பதவி? என்ற போட்டியில் ஏழாம் பொருத்தமாக இருந்தது.

BREAKING NEWS திமுக மாவட்ட செயலாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி  சோதனை... அதிர்ச்சியில் ஸ்டாலின்.! | DMK district secretary payyagounder  house raided by income tax ...

இதனால் கடந்த தேர்தலில் கார்த்திக் ஆதரவாளர்கள் பையா கவுண்டருக்கும், பையா கவுண்டர் ஆதரவாளர்கள் கார்த்திக்கிற்காகவும் முழு மனதோடு பணியாற்றவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்திருந்தது. இந்த சூழலில், மகேந்திரன் உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கினால் அவருக்காக உடன்பிறப்புக்கள் உழைப்பார்களா? அல்லது கோவையில் இருக்கும் சீனியர்கள் அதற்கு வழிவகை செய்வார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

இதனிடையே தான் மகேந்திரன் என்ற புதிய அம்பை கோவைக்குள் எய்ய ஏதுவாகியிருக்கிறது திமுக தலைமை.

மாவட்டத்திற்குள் ஏற்கனவே இத்தனை குழப்பங்கள் இருக்க, மகேந்திரன் என்ற புதிய ஒரு குழப்பத்தால் என்ன ஆகுமோ? இத்தனை தடைகளையும் தாண்டி மகேந்திரன் கோவையில் கொடி நாட்டுவாரா? என்பது திமுக தொண்டர்களுக்கே கனமான சந்தேகமாக இருக்கும் வேளையில் நாமும் சந்தேகித்துத் தானே ஆக வேண்டும்..!

Views: - 208

0

0