மஜக முன்னாள் நிர்வாகி கொலை வழக்கு: 19 குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு

Author: Udhayakumar Raman
27 October 2021, 9:25 pm
Quick Share

வாணியம்பாடி அருகே வசீம் அக்ரம் கொலை வழக்கில் தொடர்புடைய 19 குற்றவாளிகள் நவ.10-ல் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாணியம்பாடியில் வசீம் அக்ரமை ஒரு கும்பல் கொடூரமாக வெட்டிக் கொன்றுவிட்டு காரில் தப்பியது. இந்த வழக்கில் பிரசாந்த், டெல்லி குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.கொலையில் தொடர்புடைய மேலும் 6 பேர் தஞ்சை நீதிமன்றத்திலும், முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் கஞ்சா வியாபாரியான இம்தியாஸ் சிவகாசி நீதிமன்றத்திலும் சரணடைந்தனர். கஞ்சா பதுக்கல் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததால் டீல் இம்தியாஸ் கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

இந்நிலையில், கொலைக்கு உதவியதாக வாணியம்பாடியைச் சேர்ந்த நயீம் பாஷா, பைசல் அகமது உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 19 குற்றவாளிகளில் சிலர் போலீசாரால் கைது செய்யப்பட்டும், சிலர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இவர்களை போலீசார் தொடர்ந்து விசாரித்து வந்த நிலையில் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி வசீம் அக்ரம் கொலை வழக்கில் தொடர்புடைய 19 குற்றவாளிகள் நவ.10-ல் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

Views: - 636

0

0