கள்ளக்குறிச்சியில் பட்டாசு கடையில் தீ விபத்து : 5 பேர் பலி

Author: kavin kumar
26 October 2021, 9:48 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே புத்தம் புது பட்டாசு கடைகள் முளைத்துள்ளன. உரிய அனுமதி பெறாமலும் பல இடங்களில் பட்டாசு கடைகள் வைக்கப்பட்டுளதாக புகார் கூறப்படுகிறது. இந்தநிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் முருகன் என்பவர் பட்டாசு கடை போட்டிருந்தார். அந்த கடையில் இன்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.பெரிய கடையில் இருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் அருகில் இருந்த கடைகளுக்கும் தீ பரவியது. பட்டாசு கடைக்கு அருகில் இருந்த பேக்கரிக்கு தீ பரவியதை அடுத்து அங்கிருந்த சிலிண்டர் பயங்கர சத்ததுடன் வெடித்ததது.

சுமார் நூறு மீட்டர் உயரத்திற்கு தூக்கி எறியபட்ட சிலிண்டருடன் பட்டாசுகளும் வெடித்துச் சிதறியதால் அப்பகுதியே போர்க்கலம் போல் காட்சியளித்தது.பட்டாசு கடையில் ஏற்பட்ட இந்த பயங்கரமான தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தொடர்ந்து, சங்கராபுரம் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Views: - 409

0

0