‘சட்டமன்ற தேர்தல் மக்கள் நீதி மய்யத்திற்கு ஆதரவு தாருங்கள்’: பேரூர் ஆதினத்தை சந்தித்த கமல்ஹாசன்..!!

Author: Aarthi Sivakumar
29 March 2021, 1:45 pm
kamal9 - updatenews360
Quick Share

கோவை: பேரூர் ஆதினத்தை சந்தித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கோவை பேரூர் பகுதியில் அமைந்துள்ள சாந்தலிங்க அடிகளார் திருமடத்திற்கு மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும் தெற்கு தொகுதியில் வேட்பாளருமான கமலஹாசன் சென்றிருந்தார்.

சாந்தலிங்க மருதாச்சல அடிகாளரிடம் சுமார் ஒரு அரை மணி நேரம் உரையாடிக் கொண்டிருந்த கமல்ஹாசன் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தமக்கு ஆதரவு அளிக்க கேட்டுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து, நீங்கள் வெற்றி பெற்ற பின்னர் உங்களுடைய திட்டங்கள் அனைத்தும் நடைமுறைபடுத்த முயற்சியுங்கள் என கமல்ஹாசனிடம் அடிகளார் கேட்டுக்கொண்டார்.

Views: - 77

0

0