கோவை ஈச்சனாரி கோவில் கழிவறையில் ஆண் சிசு சடலமாக மீட்பு : அதிர்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 March 2021, 1:49 pm
Cbe Eechanari -Updatenews360
Quick Share

கோவை : கோவை ஈச்சனாரி கோவில் கழிவறையில் 6 மாத ஆண் சிசு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரசித்தி பெற்ற கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில், கோவில் வளாகத்தில் உள்ளா கழிவறையை இன்று காலை வழக்கம்போல் தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்ய சென்றனர்.

அப்போது கழிவறை ஒன்றின் கதவை திறந்த போது அங்கு 6 மாத ஆண் சிசு இறந்த நிலையில் கிடந்ததை பார்த்து துப்பரவு தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து, தூய்மை பணியாளர்கள் கோவில் நிர்வாகத்திடம் தகவல் அளித்தனர். சம்பவம் குறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் ஆண் சிசுவை கைபற்றி கோவை அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் கோவிலில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், குழந்தையை யார் வீசி சென்றது என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில் வளாகத்தில் ஆண் சிசுவின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Views: - 176

0

0