சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோவில் கைது…!

6 July 2021, 5:32 pm
Quick Share

வேலூர்: அலமேலுமங்காபுரம் பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போக்சோவில் போலீசார் கைது செய்துள்ளனர்.

வேலூர் அலமேலுமங்காபுரம் அடுத்த சமாதான நகரைச் சேர்ந்தவர் 23 வயதுடைய ஜாபர் என்ற இளைஞர்.இவர் அலமேலு மங்காபுரம் பகுதியில் பெட்டி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு 7 வயதுடைய சிறுமி ஒருவர் நொறுக்குத்தீனி மற்றும் சாக்லேட் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக வந்துள்ளார்.அப்போது 7 வயது உடைய அந்த சிறுமியை ஏமாற்றி கடைக்குள் அழைத்துச் சென்று பெட்டி கடை உரிமையாளர் ஜாபர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் பின்னர் பொருட்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்பிய சிறுமி பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரை ஏற்றுக்கொண்ட சத்துவாச்சாரி காவல் நிலைய போலீசார் அலமேலு மங்காபுரம் பகுதியில் உள்ள ஜாபரின் பெட்டிக்கடைக்கு சென்று ஜாபரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் சிறுமியிடம் பெட்டி கடை உரிமையாளர் தவறாக நடந்து கொண்டது தெரியவந்துள்ளது.இதைத்தொடர்ந்து ஜாபர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 403

0

0