போலி துப்பாக்கியை காட்டி பெண்ணை மிரட்டியவர் கைது

2 September 2020, 10:07 pm
Quick Share

சென்னை: பெரம்பூர் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் போலி துப்பாக்கியை காட்டி இரண்டு பேர் மிரட்டிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரம்பூர் பகுதியில் வியாசர்பாடி சாஸ்திரி நகரைச் சேர்ந்த செந்தில் குமார். இவர் டைல்ஸ் ஒட்டும் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருவதாக கூறப்படுகின்றது. மேலும் இவருக்கு திருமணமாகி மனைவியை பிரிந்து ஒரு மகனும் மகளும் உள்ளனர் . இந்த நிலையில் சமீபத்தில் பாண்டிச்சேரி சென்ற இவர் அங்கு ஒரு போலி துப்பாக்கி வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. இன்று பெரம்பூர் பட்டேல் சாலையிலுள்ள ஒரு வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அந்த போலி துப்பாக்கியை காட்டி இரண்டு பேர் மிரட்டியுள்ளார்.

உடனே பயந்து போன பெண் , காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கவே சம்பவ இடத்திற்க்கு செம்பியம் போலீசார் வர தாமதம் ஆனதால் பொதுமக்கள் தப்பிக்க முயன்ற செந்தில் குமாரை பொதுமக்கள் பிடித்து போலிசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் ஒருவர் தப்பி ஓடிவிட்டனர். அதன் பிறகு அவரை காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறன்றனர். மேலும் தப்பி சென்ற நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Views: - 0

0

0