பெண் மற்றும் 8 வயது சிறுமியை கடத்திச் சென்ற இளைஞர் : போலீசாரிடம் சிக்கியதால் பரபரப்பு!!

19 April 2021, 7:11 pm
Dharapuram Kidnap -Updatenews360
Quick Share

திருப்பூர் : தாராபுரம் வழியாக துப்பாக்கி முனையில் பெண் மற்றும் 8 வயது சிறுமியை கடத்திச் சென்ற நபரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் இருந்து துப்பாக்கி முனையில் சத்யா என்ற பெண்ணையும் தன்வர்ஷா என்ற 8 வயது பெண் குழந்தையையும் கடத்தபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சோதனையில் ஈடுபட்ட போலீசார் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் வேகமாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்த பொழுது அந்த காரில் துப்பாகியோடு இருந்த திருநின்றவூரை சேர்ந்த கார்திகேயன் முன்னுக்கு பின் முரனாக பதிலாளிக்கவே பிடிபட்ட கார்த்திகேயனயும் காரில் இருந்த சத்யா மற்றும் சிறுமி தன்வர்ஷா ஆகியோரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Views: - 143

1

0