திருநங்கைகளை தகாத வார்த்தையில் பேசியவர் கொலை : 5 பேர் கொண்ட கும்பல் கைது!!

8 April 2021, 12:15 pm
Myl Murder -Updatenews360
Quick Share

மயிலாடுதுறை : குடிபோதையில் திருநங்கைகளை தகாத முறையில் பேசியவரை கத்தியால் குத்தி கொலை செய்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறையில் திருநங்கைகளை குடிபோதையில் தகாத முறையில் பேசியவரை கொலை செய்த 5 பேரை மயிலாடுதுறை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மயிலாடுதுறை ஆற்றங்கரை தெரு வேதம்பிள்ளை காலனியை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ஐயப்பன்(வயது 48). இவர் நேற்றிரவு குடிபோதையில் அதேபகுதியில் வசிக்கும் திருநங்கைகளை தகாத முறையில் பேசியுள்ளார்.

இதை பார்த்த இளைஞர்கள் ரஞ்சித் (வயது 18), கணேசன் (வயது 43), மணிகண்டன்(வயது 19), பஜ்ருதீன்( வயது 21), செந்தில் மகன் அருள்ராஜா (வயது 24) ஆகிய 5 பேரும் ஐயப்பன் வீட்டிற்குச் சென்று தட்டிக்கேட்டுள்ளனர்.
அப்போது, இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியுள்ளது.

இதையடுத்து 5 பேரும் சேர்ந்து ஐயப்பனை உருட்டுக் கட்டையால் தாக்கி, கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினர். மயங்கிக் கிடந்த ஐயப்பனை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஐயப்பன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து தகவலறிந்த மயிலாடுதுறை போலீசார் ஐயப்பனின் உடலை கைப்பற்றி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்ததுடன், கொலை செய்த 5 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கொலை செய்யப்பட்ட ஐயப்பன் காவல் நிலைய குற்றவியல் பட்டியலில் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐயப்பன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 1

0

0