‘அலைபாயுதே’ பட பாணியில் வாழ்ந்த வாழ்க்கையில் சந்தேகம்.. காதல் மனைவியின் கழுத்தை அறுத்த கணவன் கைது..!!

Author: Babu Lakshmanan
6 July 2022, 1:42 pm

வேலூர் அருகே காதல் மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குப்பத்தா மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் என்பவரின் மகள் யாஷினி. இவர், வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் மெடிக்கல் ரெக்கார்ட்ஸ் பிரிவில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.

இவரும், அதே பகுதியை சேர்ந்த தனியார் கண் தொழில் நுட்பம் படித்து வரும் சதிஷ் என்பவரும் காதலித்துள்ளனர். இவர்கள் இருவரும் காதலித்து சில மாதங்களுக்கு முன்னர், கோவில் ஒன்றில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் திருமணம் செய்து கொண்டது இரு வீட்டாருக்கும் தெரியாத நிலையில், காதல் மனைவி யாஷினி மீது சதிஷிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், சதிஷ் யாஷினி இருவரும் சந்தித்து பேசிய போது, வாய் தகராறு ஏற்பட்டு யாஷினியை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார்.

இதனால் பொதுமக்கள் அவனை பிடித்து திருவலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். படுகாயமடைந்த யாஷினி சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருவலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சதிஷ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். காதல் மனைவியை கணவனே கழுத்தை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Amala Paul viral video 2024 நடுக்கடலில் அமலாபால்..சர்ப்ரைஸ் கொடுத்த கணவர்…வைரலாகும் வீடியோ..!
  • Views: - 820

    0

    0