முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டின் முன் தீக்குளித்த நபர் : படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!!

Author: Udayachandran RadhaKrishnan
27 September 2021, 11:08 am
CM Home Suicide - Updatenews360
Quick Share

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டின் முன்பு ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டின் முன்பு 40 வயது மதிக்கத்தக்க வெற்றிமாறன் என்ற நபர் திடீரென தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அவரை மீட்ட முதலமைச்சர் பாதுகாப்பு பிரிவு காவல்துறையினர் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். எதற்காக அந்த நபர் தீக்குளித்தார் என்று விபரம் இன்னும் வெளியாகவில்லை.

முதலமைச்சர் வீட்டின் முன் இன்று காலை மண்ணென்ணை ஊற்றி தீக்குளித்த வெற்றிமாறன் யார் என்பது குறித்தும், எதற்காக தற்கொலையில் ஈடுபட்டார் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Views: - 184

0

0