கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு : போலீசார் விசாரணை…

Author: kavin kumar
7 February 2022, 3:45 pm
Quick Share

திருச்சி : மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத 25 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிக்சாண்டார் கோவில் ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சடலமாக கிடப்பதாக கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கொள்ளிடம் போலீசார் திருச்சி கோட்ட ரயில்வே போலீசார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் லீலி வரவழைக்கப்பட்டது. நாய் சிறிது தூரம் அங்குமிங்கும் சுற்றி நின்றது. பின்னர் உடலை கைப்பற்றிய கொள்ளிடம் போலீசார உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர் யார், எந்த ஊர், எப்படி இங்கு வந்தார், எப்படி இறந்தார், கொலையா அல்லது தற்கொலையா என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 431

0

0