தடுப்பூசி போடும் பணியில் ஈடுபடும் மருத்துவ பணியாளர்களுக்கு வார விடுப்பு கட்டாயம்: பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவு..!!

By: Aarthi
15 September 2021, 12:58 pm
Quick Share

சென்னை: கொரோனா தடுப்பூசி போடும் பணியில் ஈடுபடும் அனைத்து மருத்துவ பணியாளர்களுக்கும் வாரம் ஒருமுறை வார விடுப்பு வழங்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு கோவிட்-19 பெருந்தொற்று என அறிவித்தது. அண்மைக்காலங்களில் உலக அளவில் மட்டுமல்லாமல் இந்தியாவில், தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் நோய்த்தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

Image

தமிழ்நாட்டில் கோவிட் தொற்றின் இரண்டாவது அலை பரவிய பிறகு சுகாதாரப் பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பொது சுகாதாரத் துறையில் காய்ச்சல் மற்றும் நோய்த் தடுப்புப் பிரிவில் பணியாற்றும் பணியாளர்கள் மிகவும் கடுமையாகப் பணியாற்றி வருகிறார்கள்.

பொது சுகாதாரத்துறை இயக்குனர் டி.எஸ்.செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி தொடங்கி தற்போது வரை கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 13ம் தேதி வரை 4,05,57,434 பயனாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது சுகாதரப் பணியாளர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமானது.

மேலும், மெகா தடுப்பூசி முகாம் அனைவரது ஒத்துழைப்பால் வெற்றியடைந்துள்ளது. இதனால், அனைத்து சுகாதாரத்துறை துணை இயக்குநர்களும், தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவப் பணியாளர்களுக்க வாரம் ஒருமுறை வாரவிடுப்பு அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி பாதிக்காத வண்ணம் சுழற்சி முறையில் விடுப்பு வழங்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 79

0

0