புதுச்சேரியில் களைகட்டிய மஞ்சுவிரட்டு : தமிழர் பாரம்பரிய உடையில் பங்கேற்ற வெளிநாட்டினர்!!

16 January 2021, 7:11 pm
Pondy Manju Virattu - Updatenews360
Quick Share

புதுச்சேரி : சர்வதேச நகரமான ஆரோவில்லில் மஞ்சு நாட்டுமாடுகளை கொண்டு மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது. இதில் ஏராளமான வெளிநாட்டவர்கள் தமிழரின் பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்றனர்

தமிழகம் மற்றும் புதுச்சேரி பல்வேறு பகுதிகளில் காணும் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. வெளிநாட்டவர் அதிகம் வாழும் ஆரோவில் குயிலாப்பாளையம் மந்தைவெளி திடலில், காணும் பொங்கலை முன்னிட்டு மஞ்சு விரட்டு நடைபெற்றது. இதில் ஆரோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள், மாடுகளின் கொம்புகளை சீவி, அழகிய வண்ணங்களை தீட்டி, அலங்கரித்து, மஞ்சு விரட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செய்தனர்.

மஞ்சு விரட்டு நிகழ்ச்சியில் காளைகள் சீறி பாய்ந்த போது, அவர்களது நிலத்தில் விளைந்த மா, புளி, வாழை போன்றவற்றை சூறையாடிவிட்டு மகிழ்ந்தனர். ஆரோவில் வசிக்கும் வெளிநாட்டு பெண்கள், தமிழக பாரம்பரிய உடையான புடவை, தாவணி அணிந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு உள்ளூர் மக்கள் கரும்பு, பொங்கல் வழங்கி மகிழ்ந்தனர்.

திரை படங்களின் ‘ஸ்டில்களை’ காளை கொம்புகளில் கட்டி விரட்டி சென்றனர். மஞ்சு விரட்டு நிகழ்ச்சியையொட்டி மக்கள் பொருட்கள் வாங்க குயிலாப்பாளையத்தில் சந்தை நடந்தது. விழுப்புரம் எஸ்.பி., ராதாகிருஷ்ணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Views: - 0

0

0