மன்மோகன் சிங் நலம் பெற வேண்டும்:முதல்வர் மு.க. ஸ்டாலின் ட்விட்

Author: kavin kumar
14 October 2021, 7:17 pm
Quick Share

சென்னை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவாகவும் முழுமையாகவும் நலம்பெற விழைகிறேன் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். மன்மோகன் சிங் அவர்களுக்கு மூச்சுத்திணறல், நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவரது உடல்நலம் சீராக இருப்பதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, அரசியல் தலைவர்கள் பலரும் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என அறிக்கை வெளியிட்டுவருகின்றனர்.

இந்த நிலையில் மன்மோகன் சிங் விரைவில் நலம்பெறவேடும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டர் பதிவில் ஸ்டாலின் கூறியுள்ளதாவது:-
மாண்புமிகு முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் விரைவாகவும் முழுமையாகவும் நலம்பெற விழைகிறேன்.இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

Views: - 254

0

0