ராஜகோபாலசாமி கோவில் நிர்வாகத்தில் முறைகேடு : பெண் அதிகாரி பணி நீக்கம்

Author: kavin kumar
6 February 2022, 4:52 pm
Quick Share

திருவாரூர் : மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் செயல் அலுவலர் சங்கீதா பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற ராஜகோபால சாமி கோவில் செயல் அலுவலராக பணிபுரிந்து வந்தவர் சங்கீதா. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கோவிலில் செயல் அலுவலராக சேர்ந்து பணியாற்றி வந்தார். இந்நிலையில் செயல் அலுவலர் சங்கீதா நிர்வாக ரீதியாக சில முறைகேடுகளில் ஈடுபடுவதாக இந்து சமய அறநிலையத்துறை உயரதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.புகார் குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர். அதில் முறைகேடுகள் நடந்ததற்கான ஆரம்ப கட்ட முகாந்திரங்கள் இருந்ததால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு நாகை மண்டல இணை ஆணையர் தென்னரசு தனது உயரதிகாரிகளுக்கு பரிந்துரைத்தார்.

இதையடுத்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் செயல் அலுவலர் சங்கீதாவை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். புதிய செயல் அலுவலராக கவியரசன் பணியாற்றுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ராஜகோபால சுவாமி ஆலயத்தில் பெண் செயல் அலுவலர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டது பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செயல் அலுவலர் சங்கீதா மீதான புகார்கள் குறித்து துறை ரீதியான தொடர் விசாரணை நடைபெறும் என்றும், அதன் முடிவில் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால் அவர் மீது உயர் அதிகாரிகளின் வழிகாட்டலின் பேரில் சட்டரீதியாக க

Views: - 557

1

0