அதிக வட்டி தருவதாகக் கூறி பல கோடி சுருட்டிய பெண் டீச்சர் : பணத்தை திருப்பிக் கேட்டவர்களுக்கு கொலை மிரட்டல்… கில்லாடி தம்பதிக்கு செக்!!

Author: Babu Lakshmanan
3 December 2021, 7:34 pm
Quick Share

வேலூர் : வேலூர் அருகே அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, பல கோடிகளை சுருட்டிய அரசுப் பள்ளி ஆசிரியையை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் கொணவட்டம் பகுதியைச் சேர்ந்த கொணவட்டம் அரசு பள்ளி ஆசிரியை மகேஸ்வரி. அவரது கணவர் தர்மலிங்கம், ஒய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளராவார். இருவரும் சேர்ந்து கார், லாரி மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு பணம் தேவைப்படுவதாகவும், பணம் கொடுத்தால் அதிக வட்டி தருகிறேன் என பலரிடம் கூறி உள்ளனர்.

இதனால், ராணிப்பேட்டையை சேர்ந்த ஜான்சிராணி என்கின்ற ஆசிரியை அவர் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பணம் வசூல் செய்து 2.5 கோடி ரூபாயை மகேஸ்வரியிடம் கொடுத்துள்ளார். இதேபோல், வேலூரில் உள்ள தமிழ்ச் செல்வி என்பவர் 2.5 கோடியும், வேலூர் மாவட்டத்தில் மலர் என்பவரும் 45 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார். பல மாதங்களாகியும் வட்டியும் தரவில்லை, பணமும் கொடுக்கவில்லை.

இதனால், பணம் கொடுத்தவர்கள் மகேஸ்வரியை கேட்டபோது, அவர் என் கணவர் தர்மலிங்கம் காவல்துறையில் வேலூர் மாவட்டத்திலேயே பணியாற்றியதால் எல்லா அதிகாரிகளையும் தெரியும். நீ எங்கு வேண்டுமானாலும் போய் புகார் செய்து கொள். எங்களை ஒன்றும் செய்ய முடியாது. நீ கொடுத்த பணத்தை வைத்துக்கொண்டு, அதையே லஞ்சமாக எல்லா அதிகாரிகளுக்கும் கொடுத்து எங்கள் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லாமல் பாரத்துக்கொள்வேன், என மிரட்டியும்
உள்ளனர்.

மேலும், பணம் கொடுத்தவர்கள் வீட்டிற்கு குண்டர்களை அனுப்பி மிரட்டி உள்ளனர். பணத்தை திருப்பிகேட்டால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பு அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஆசிரியை மகேஸ்வரி
மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்து வேலூர் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

Views: - 510

0

0