மருத்துவர் வேடத்தில் மாவோயிஸ்ட்? கோவையில் கேரள போலீசார் சோதனை!!

4 February 2021, 3:54 pm
Cbe Doctor Arrest - Updatenews360
Quick Share

கோவை : மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருந்ததாக கோவையைச் சேர்ந்த பல் மருத்துவர் ஒருவரை கேரளா போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர் .

மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் உள்ளவர்களை சிறப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்ததாக கோவையில் மூன்று பேரின் வீடுகளில் கேரள போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

உக்கடம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவரது வீடு, சுங்கம் பைபாஸ் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவரது வீடு மற்றும் இடையர்பாளையம் பகுதியிலுள்ள மருத்துவமனை ஆகியவற்றில் சோதனை மேற்கொண்டனர். இடையர்பாளையம் பகுதியிலுள்ள மருத்துவமனையில் சோதனை செய்த கேரள போலீசார் அங்கு வைத்து பல் மருத்துவர் தினேஷை கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து கேரள போலீசார் பல் மருத்துவரான தினேஷை கேரள மாநிலம் மலப்புரத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும் பல் மருத்துவர் தினேஷிடம் விசாரணை நடத்தினால்தான் அவருக்கு மாவோயிஸ்டுகளுக்கும் உள்ள தொடர்பு தெரிய வரும் என போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0