விக்ரம் வெற்றி சந்திப்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்து சமீபத்தில் வெளியான படம் விக்ரம். இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய வேடத்தில் சில நிமிடங்கள் மட்டும் தோன்றினார். இந்த படத்தில் லோகேஷின் முந்தைய படமான கைதியின் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.
இந்த படம் பெறும் வெற்றி பெற்றுள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ள கமல்ஹாசன் படக்குழுவினருக்கு பல்வேறு பரிசுகளை வழங்கி பாராட்டி வருகிறார். இந்நிலையில் படத்தின் வெற்றி குறித்து இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் லோகேஷ் மற்றும் கமல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் “மருதநாயகம் மற்றும் சபாஷ் நாயுடு ஆகிய படங்கள் உயிர்ப்பெறுமா?” என்று கேட்டபோது, “பாக்கணும், அந்த படங்களோடு நான் நீண்ட நாட்கள் வாழ்ந்துவிட்டதால், எனக்கு இப்போது அவற்றின் மீது ஆர்வமின்மை ஏற்பட்டுவிட்டது” என்று கூறியுள்ளார். இதனால் அந்த படங்கள் மீண்டும் வருவதற்கு வாய்ப்பில்லை என்பதை சூசகமாக கூறியுள்ளார்.
பிரபல இயக்குநர் சொன்ன கதைப்படி படம் முழுவதும் பாவாடை கட்டிக்கிட்டு வரவேண்டும் என்பதால் படத்தில் இருந்து விலகியுள்ளார் சூப்பர் ஸ்டார்.…
தேர்தலை நோக்கி விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கி விஜய் நடைபோட்டுக்கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் இரண்டு…
விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி பெரிய திரையில் வாய்ப்பு பெற்றவர் நடிகர் யோகி பாபு. டைமிங் காமெடி மூலம்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக வடக்கு மண்டல் தலைவராக பாலகிருஷ்ணன் என்பவரது பதவி ஏற்பு விழா உசிலம்பட்டியில் உள்ள தனியார்…
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
This website uses cookies.