நாளை முதல் மாஸ்க் கட்டாயம்.. தமிழகத்தில் மீண்டும் பரவும் கொரோனா : அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
31 March 2023, 10:26 am
TN MAsk - Updatenews360
Quick Share

தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் நாளை முதல் அரசு மருத்துவமனைகளில் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தமிழ்நாடு மாநில சுகாதார பேரவையை தொடங்கிவைத்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:- நாளை முதல் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் உள்பட அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம்.

மருத்துவர்கள், பணியாளர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லை. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும். கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து உலகம் முழுவதும் தாண்டவம் ஆடுகிறது என்றார்.

Views: - 131

0

0