‘மாஸ்க் இல்லையா அபராதத்த கட்டு’ : வாகன ஓட்டிகளிடம் SPOT வசூல் செய்யும் அதிகாரிகள்!!

15 April 2021, 6:37 pm
No Mask Spot Fine-Updatenews360
Quick Share

ஈரோடு : புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி பகுதியில் முக கவசம் அணியாமல் வாகனத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று இரண்டாம் அலை தற்போது அதிகரித்து வரும் வேளையில் இதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் எனவும் முக கவசம் அணியாமல் சாலையில் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி‌‌ டானா புதூர் சோதனைச்சாவடியில் முக கவசம் அணியாமல் இரண்டு சக்கரம், நான்கு சக்கர வாகனத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கும் ‌புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தினர் அபராதம் விதித்து வருகின்றனர்.

Views: - 63

0

0